கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.

ராஜா

UPDATED: May 15, 2024, 12:51:58 PM

Theni District News

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக பெய்த கன மழையால் அருவிக்கு நீர் வரத்த அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Theni District News Today

இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த இரண்டு நாட்களாக வனத்துறையினர் குளிக்க தடை விதித்தனர்.

இந்த நிலையில் நேற்று அருவியில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாத நிலையில் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானதால் இரண்டு நாட்களுக்குப் பின்பு கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்தனர்.

Theni News Today

இதனால் அதிகாலை முதலே கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். 

அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டி வரும் நீரில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆனந்த குளியல் குளித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

 

VIDEOS

Recommended