• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • படப்பை நகரில் அறுந்து விழுந்த மின் வயர் மற்றும் மிகவும் தாழ்வாக செல்லும் மின்சார வயர்களால் பொதுமக்கள் அச்சம்.

படப்பை நகரில் அறுந்து விழுந்த மின் வயர் மற்றும் மிகவும் தாழ்வாக செல்லும் மின்சார வயர்களால் பொதுமக்கள் அச்சம்.

லட்சுமி காந்த்

UPDATED: May 9, 2024, 7:39:21 PM

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் ஹாஜியார் நகரில் சுமார் 500 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பெரும்பாலும் இங்கு வசிப்பவர்கள் தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களாகவும் கூலி வேலை செய்பவர்களும் உள்ளனர்.

அதிக அளவில் வெளிமாநில தொழிலாளர்களும் இஸ்லாமியர்களும் தங்கி உள்ள பகுதியாக இது காணப்படுகிறது.

ஹாஜியார் நகர் அருகே மின்சாரக் கம்பத்தில் இருந்து மற்றொரு மின்சார கம்பத்திற்கு செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் அந்த சாலையை கடக்கின்றனர்.

மேலும் காற்று அதிகமாக வீசினால் கூட தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகள் அறுந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அந்த சாலையை கடக்காமல் சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு 15 முதல் 20 அடி உயரம் கொண்ட மின் கம்பங்களில், உயர் அழுத்த மின்சாரம் செல்லும் வகையில் மின்கம்பிகள் அமைக்கப்பட்டன. அதை மாற்றாமல் அப்படியே உள்ளது.

பொதுமக்கள் கைகளை உயர தூக்கினால் தொடக்கூடிய உயரத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்கிறது. அது மட்டுமல்லாமல் தற்போது உறுப்பினர் மழையின் காரணமாகவும் ஒரு வயர் அறுந்து கீழே தொங்கிக் கொண்டுள்ளது.

இதனால் இந்த பகுதியில் சுமார் 2 மணி நேரமாக மின்சார சப்ளை இல்லை. அது மட்டும் அல்லாமல் மின்வாரிய ஊழியர்கள் அறுந்து போன வயரை சரிப்படுத்துவதற்காகவும் , தொட கூடிய அளவில் தொங்கிக் கொண்டிருக்கும் வயர்களை உயர் தூக்கி தூக்கி கட்டுவதற்காகவும் வந்தவர்கள் சுமார் ஒரு மணி நேரமாக டீக்கடையில் அமர்ந்து கதை பேசிக் கொண்டு உள்ளார்கள் என பகுதி மக்கள் கூறுகின்றனர். 

இப்பகுதிகளில் அவசர காலத்தில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட தீயணைப்பு துறை வாகனங்கள் அவசர ஊர்திகள் உள்ளிட்டவை செல்ல முடியாத நிலை உள்ளது.

அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பே உடனடியாக புதிய மின் கம்பங்களை நட்டு, உயரத்தில் மின்வயர்களை பொருத்த மின்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended