- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கிறிஸ்துவ சர்ச்சுகளின் முறையற்ற நிர்வாகம் ஒருங்கிணைப்பு வாரியம் அமைப்பதே தீர்வாகும் மதுரை உயர் நீதி மன்றம் அதிரடி.
கிறிஸ்துவ சர்ச்சுகளின் முறையற்ற நிர்வாகம் ஒருங்கிணைப்பு வாரியம் அமைப்பதே தீர்வாகும் மதுரை உயர் நீதி மன்றம் அதிரடி.
கார்மேகம்
UPDATED: Oct 26, 2024, 8:56:09 AM
இராமநாதபுரம்
இஸ்லாமியர்களின் மசூதி சொத்துக்களை முறைப்படுத்த வக்பு வாரியம் இருப்பது போல் இந்து கோயில்களுக்கு அறநிலையத்துறை இருப்பது போல் கிறிஸ்தவ நிறுவனங்களுக்கும் ஒருங்கிணைப்பு வாரியம் தேவை என மதுரை உயர் நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது
சர்ச் மற்றும் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் மூலமாக கோடிக்கணக்கான வெளிநாட்டு நிதி பெறப்படுகிறது
இந்த பண பரிமாற்றத்திற்கு முறையான கணக்குகளை எந்த வொரு சர்ச் நிர்வாகமும் பின்பற்றுவதில்லை தமிழகத்தில் திருநெல்வேலி சென்னை கோவை போன்ற பெரு நகரங்களில் உள்ள சர்ச்சுகளில் பணம் சம்பந்தமாக பல்வேறு மோதல்கள் ஏற்பட்டுள்ளன
Latest Ramanathapuram News
தமிழகத்தில் பல சர்ச்சுகளில் பேராயர் தேர்தல் நடத்தப்பட்டு அதில் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்யப்படுகிறது
இந்த தேர்தலிலும் பல்வேறு ஊழல் கணக்குகள் காட்டப்படுகின்றன பல்லாயிரம் கோடி சர்ச்சுகள் புழங்கி வருகின்ற போதும் மாநில அரசின் சார்பாக கிறிஸ்தவ சர்ச்சுகளுக்கு மானியமும் வழங்கப்பட்டு வருகிறது
அதே போல கிறிஸ்தவ ஆதரவற்றோர் இல்லத்திற்கு பல்வேறு நன்கொடைகளும் பெறப்படுகின்றது இந்த கணக்கு வழக்குகளையும் அவர்களே பார்த்துக் கொள்வதால் பணப்பங்கீட்டிலும் பல இடங்களில் கைகலப்புகள் நடந்துள்ளன
இந்து முன்னனி
கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற தைரியத்தில் கிறித்தவ நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்களை தடுக்கும் விதமாக அறநிலையத்துறை வக்பு வாரியம் போன்று கிறிஸ்தவ நிறுவனங்களுக்கும் முறையான நிர்வாகத்திற்காக ஒருங்கிணைப்பு வாரியம் என்ற கருத்தை முன்மொழிந்த மதுரை உயர் நீதிமன்றத்தை பாராட்டுவதோடு மத்திய மாநில அரசுகள் கிறிஸ்தவ நிறுவனங்களை கட்டுப்படுத்த வாரியம் அமைக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்று இந்து முன்னனி கேட்டுக்கொள்கிறது.