• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கட்டிடங்களை துணை முதல்வர் மக்கள் பயன்பாட்டிற்கு  அர்ப்பணித்தார்.

பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கட்டிடங்களை துணை முதல்வர் மக்கள் பயன்பாட்டிற்கு  அர்ப்பணித்தார்.

ஆர். தீனதயாளன்

UPDATED: Nov 8, 2024, 8:55:30 AM

தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாபநாசம் சட்டமன்ற தொகுதி அம்மாபேட்டை ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் எம். எச். ஜவாஹிருல்லாவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கட்டிடங்களை காணொளி காட்சி மூலமாக பொது மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

1.இரும்புத்தலை ஊராட்சியில் ரூ 13.50 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம்,

2.மேல களக்குடி ஊராட்சியில் ரூ 17.15 லட்சம் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டிடம், 

3.மேலக் கொருக்குப்பட்டு ஊராட்சியில் ரூ. 17.40 லட்சம் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டிடம், 

4.கீழக்கோவில்பத்து ஊராட்சியில் ரூ. 17.40 லட்சம் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டிடம், 

5.குமிளக்குடி ஊராட்சியில் ரூ. 17.40 லட்சம் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டிடம், 

6.கோவத்தக்குடி ஊராட்சியில் ரூ. 17.40 லட்சம் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டிடம், 

7.சூழியக்கோட்டை ஊராட்சியில் ரூ. 16.75 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. 

உதயநிதி ஸ்டாலின்

துணை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறக்கப்பட்ட இந்த புதிய கட்டிடங்களை பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம். எச். ஜவாஹிருல்லா நேரில் சென்று பார்வையிட்டார். 

அப்போது புதிய ரேசன் கடைகளில் பயனாளிகள் குடிமைப் பொருள்களை வழங்கினார். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுடன் கலந்துரையாடினார். 

இந்த நிகழ்வுகளில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கே.வீ.கலைச்செல்வன், துணை பெருந்தலைவர் தங்கமணி சுரேஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் இராசன், ஒன்றியக் குழு உறுப்பினர் பி. எஸ். குமார் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர், ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended