- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ராஜபாளையம் அருகே உரிய அனுமதியின்றி 2 கிலோமீட்டர் தொலைவிற்க்குள் 19 வேகத்தடைகளை நீக்க பொதுமக்கள் கோரிக்கை.
ராஜபாளையம் அருகே உரிய அனுமதியின்றி 2 கிலோமீட்டர் தொலைவிற்க்குள் 19 வேகத்தடைகளை நீக்க பொதுமக்கள் கோரிக்கை.
அந்தோணி ராஜ்
UPDATED: Aug 10, 2024, 12:14:52 PM
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் அருகே உள்ள பகுதி சத்திரப்பட்டி சம்சிகாபுரம் இப்பகுதியில் இருந்து வன்னியம்பட்டி வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலை உள்ளது.
சங்கரபாண்டிபுரம் கிழவி குளம் உட்பட பல்வேறு கிராமங்களையும் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளையும் ஒன்றிணைக்கும் இச்சாலையில் சம்சிகாபுரத்திலிருந்து வன்னியம்பட்டி செல்லும் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்க்குள் 19 வேகத்தடைகளை தொழிற்சாலை நிறுவனங்கள் மற்றும் அப்பகுதி தெரு மக்கள் எவ்வித அரசு அனுமதி இன்றி வேகத்தடை அமைத்துள்ளனர்.
வேகத்தடை
இதன் காரணமாக அச்சாலைகளை பயன்படுத்தும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்கள் வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளானது மட்டுமின்றி போக்குவரத்து நெரிசல் மற்றும் தொடர் விபத்துக்கு ஆளாகி வருவதாகவும்
மேலும் மகப்பேறு மற்றும் அவசர தேவை மருத்துவ தேவை ஆகியவற்றிற்காக அச்சாலையினை பயன்படுத்தும் பொதுமக்கள் முறையின்றி அமைக்கப்பட்ட வேகத்தடையினால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளனர்.
Latest District News in Tamil
புகார் மனுவின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவின் பேரில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முத்துமீனா குமாரி தலைமையில் உரிய அரசு அனுமதியின்றி முறைகேடான வகையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்குள் கட்டப்பட்டிருந்த 19 வேகத்தடைகளை காவல்துறை பாதுகாப்புடன் அகற்றினர்.
வேகத்தடைகள் அகற்றப்பட்டது குறித்து பொதுமக்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த நிலையில் அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த வேகத்தடைகளினால் வாகனங்கள் அடிக்கடி பழுதாவது விபத்து ஏற்ப்படுவது உட்பட பல்வேறு இன்னல்களில் இருந்து எங்களுக்கு விடிவுகாலம் பிறந்தது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.