ரயில் நிலையத்தை மீண்டும் செயல் படுத்த பொதுமக்கள் கோரிக்கை.

கண்ணன்

UPDATED: Jul 8, 2024, 6:37:08 PM

Dindigul News Paper Today

பழனி அருகே உள்ள கணக்கம்பட்டி இரயில் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்- ஆங்கிலேயர் காலத்தில் துவங்கப்பட்டு பயன்பாட்டில் இருந்த வந்த ரயில் நிலையம் - கிழக்கே போகும் ரயில் உள்ளிட்ட சினிமா படங்கள் எடுக்கப்பட்டது - புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பழனி அடுத்த கணக்கன்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்தது ரயில் நிலையம். ஆங்கிலேயர் காலத்தில் துவங்கப்பட்ட ரயில் நிலையம் கடந்த 70 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வந்தது. கிழக்கே போகும் ரயில் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இந்த ரயில் நிலையத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

Latest Dindigul News & Live Updates

கணக்கம்பட்டி ரயில் நிலையத்திலிருந்து சுற்றுவட்டார கிராமங்களான ஆயக்குடி, எரமநாயக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, அமரபூண்டி உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று வந்துள்ளனர். 

மீட்டர்கேஜ் ரயில்பாதையாக இருந்த போது பழனிக்கு கோவை, மதுரை, ராமேசுவரம் போன்ற ஊர்களில் இருந்து வரும் ரயில்கள் இந்த கணக்கன்பட்டி ரயில் நிலையத்தில் நின்று சென்றன.

ஆனால் கடந்த 2012 ஆம் ஆண்டு பழனி - திண்டுக்கல் இடையான ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு, மின்மயமாக்கப்பட்டதை அடுத்து இந்த ரயில் நிலையம் மூடப்பட்டது.

Latest Dindigul District News 

ரயில் நிலையத்தை மூடக்கூடாது என கிராம மக்கள் ரயில்வே அதிகாரிகளை சந்தித்து பல மனுக்களை அப்போதே அளித்தனர். இருந்த போதும் ரயில்வே நிர்வாகம் பணியாளர்களை குறைக்கும் விதமாக இந்த ரயில் நிலையத்தை மூடி நடவடிக்கை எடுத்தது. 

தற்போதுகணக்கன்பட்டியில் உள்ள சற்குரு மூட்டை சுவா மிகள் ஜீவசமாதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், ஆயக்குடி பகுதியில் இருந்து தினமும் கொய்யா, மா, சப்போட்டா போன்ற பழங்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

மேலும் ஆயக்குடியில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையத்தில் படிப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆயக்குடிக்கு வந்து செல்கின்றனர்

எனவே, தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் கணக்கன்பட்டி ரயில் நிலையத்தை புதுப்பித்து மீண்டும் ரயில்கள் இங்கு நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர்.

 

VIDEOS

Recommended