- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருச்சியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கருப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்
திருச்சியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கருப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்
Jk
UPDATED: Apr 18, 2024, 1:53:37 PM
திருச்சி தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெரு,பகுதியில் உள்ள பாலன் தெருவில் 80 வருடங்களாக சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதி புறம்போக்கு என்பதால் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை தேர்தல் நடைபெறும் போதெல்லாம் வாக்கு கேட்டு வருபவர்கள் தங்களுக்கு பட்டா பெற்று தருவோம் என வாக்குறுதி அளிக்கச் செல்கின்றனர். ஆனால் இதுவரை பட்டா வழங்கவில்லை.
மேலும் தற்பொழுது இப்பகுதியில் குடிதண்ணீர் வழங்கப்படவில்லை, மேலும் தெருவில் உள்ள விளக்குகளுக்கான மின்சாரம் வழங்கப்படவில்லை.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மின்சாரம் மற்றும் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்ததை துண்டிக்கப்பட்டதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவிடமும், மாவட்ட ஆட்சியிடமும் மாநகராட்சி மேயர் உட்பட பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
மேலும் அப்பதியில் செயல்படும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சாதகமாக நகராட்சி அதிகாரிகள் செயல்படுவதாகவும் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து திடீரென பகுதி மக்கள் அப்பகுதியில் கருப்பு துணியை கட்டி பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தங்களுக்கு உடனடியாக குடிநீர் உட்பட அடிப்படை செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொதுமக்களின் தேர்தல் புறக்கணிப்பு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
தகவல் அறிந்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி பணிகளை
மேற்கொள்ளும்படி மாநகராட்சி ஊழியர்களுக்கு தெரிவித்தார்.
தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான பணிகளையும், மின்சார வாரியம் மூலமாக மின்சாரம் கொடுக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மேயர் சம்பவ இடத்திற்கு வந்ததை அறிந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் பொழுது சம்பவ இடத்திற்கு மாநகராட்சி மேயர் எப்படி வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார்.
இதனால் சுமார் அப்பகுதியில் மூன்று மணி நேரமாக பரபரப்பு ஏற்பட்டது.