- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பொன்னேரி அருகே ஊரைவிட்டு ஒதுக்கியவருடன் பேசியதால் ஐந்து பேர் மீது பயங்கர தாக்குதல் எட்டு பேருக்கு காயம்.
பொன்னேரி அருகே ஊரைவிட்டு ஒதுக்கியவருடன் பேசியதால் ஐந்து பேர் மீது பயங்கர தாக்குதல் எட்டு பேருக்கு காயம்.
S.முருகன்
UPDATED: May 24, 2024, 7:41:16 PM
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள அவுரிவாக்கம் மேல் குப்பத்தில் வீட்டுமனையை சுற்றி கம்பி வேலி அமைத்ததால் தட்டி கேட்ட வீட்டு உரிமையாளர் சங்கீத்தாஸ் என்பவரை கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஊரை விட்டு தள்ளி வைத்ததால் மீன்பிடித் தொழில் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் இழந்து வாழ்ந்து வந்த நிலையில்
நேற்று அவரிடம் ஊரின் கட்டுப்பாட்டை மீறி பேசியதாக கூறி அவுரிவாக்கம் மேல் குப்பத்தைச் சார்ந்த சங்கீத்தாஸ், வேலாயுதம், விஜயன், சங்கீதா, சூரியகலா மற்றும் அவருடைய உறவினர்கள் எட்டு பேருக்கும் மேலாக அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கத்தி கம்பு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெறித்தனமாக தாக்கியுள்ளனர்.
இதனால் பலத்த காயமடைந்தவர்கள் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் அனைவரும் அதிகாலை 4 மணிக்கு அவசர அவசரமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
வலி வேதனை மற்றும் காயம் இருக்கும் நிலையில் எங்களை ஏன் டிஸ்சார்ச் செய்கிறீர்கள் என கேட்டபோது இந்த இடத்தை விட்டு காலி செய்யுங்கள் என காவல்துறையினருடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை வெளியே அனுப்புவதில் மருத்துவமனை நிர்வாகம் கவனமாக இருந்தாக கூறப்படுகிறது.
ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை விட்டு செல்லாமல் தங்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறி மருத்துவமனையிலேயே இருந்துள்ளனர்
பின்னர் இந்த சம்பவம் பரவலாகி வந்த நிலையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவத்தால் அவுரிவாக்கம் மேல் குப்பம் கிராமத்திலும் பொன்னேரி அரசு மருத்துவமனை வளாகத்திலும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.