சோத்துப்பாறை மற்றும் மஞ்சளார் அணையின் நீர்மட்டம் உயர்வு.!!

ராஜா

UPDATED: May 18, 2024, 9:37:27 AM

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் குடிநீர் ஆதாரமாகவும் பாசனத்திற்கும் உள்ள சோத்துப்பாறை அணை மற்றும் மஞ்சளார் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மழை பொழிவு இல்லாத இருந்தது.

இந்நிலையில் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சோத்துப்பாறை அணை மற்றும் மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால் அணைக்கு நீர் வரத்து துவங்கி அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர துவங்கியது.

எனவே நேற்று தேனி மாவட்டத்திற்கு மஞ்சள் நிற மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை 7 மணி நேரத்திற்கும் மேலாக சோத்துப்பாறை அணை மற்றும் மஞ்சளார் அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது.

கனமழையால் இரண்டு அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.

சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் ஒரே நாளில் 115.12 அடியில் இருந்த நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 120.37 அடியாக உயர்ந்துள்ளது.

அதேபோல் மஞ்சளார் அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் அணையின் நீர்மட்டம் 44அடியாக இருந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 46 அடியாக உயர்ந்துள்ளது.

அணைகளின் நிலவரங்கள் :

சோத்துப்பாறை அணை : 120.37 (126.28)

நீர்வரத்து : 100 கன அடி

நீர் வெளியேற்றம் : 3 கன அடி

நீர் இருப்பு : 90.30 மில்லியன் கன அடி 

மழை அளவு 2.3 சென்டிமீட்டர்.

மஞ்சளார் அணை 46 (57)

நீர்வரத்து : 302 கன அடி

நீர் வெளியேற்றம் இல்லை

அணையில் நீர் இருப்பு : 271.12 மில்லியன் கன அடி .

மழை அளவு 8.5 சென்டிமீட்டர் பதிவாகியுள்ளது.

 

VIDEOS

Recommended