- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கம்பம் நகரில் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல தாயாரிடம் மறுப்பு தெரிவித்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை.
கம்பம் நகரில் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல தாயாரிடம் மறுப்பு தெரிவித்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை.
ராஜா
UPDATED: Jun 12, 2024, 10:58:40 AM
தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெருவைச் சேர்ந்வர் ராஜா(வயது 29) இவர் குவைத் நாட்டில் வேலை பார்த்து விட்டு 1 மாத விடுமுறைக்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சொந்த ஊரான கம்பத்திற்கு வந்துள்ளார்.
அப்போது அவரது தாயார் சுமதியிடம் மீண்டும் வெளிநாட்டு வேலைக்கு செல்லாமல் சொந்த ஊரிலேயே நண்பருடன் சேர்ந்து தொழில் தொடங்கபோவதாக கூறியுள்ளார்.
இதற்கு தாயார் மறுப்பு தெரிவித்து இன்னும் 2 வருடங்கள் மட்டும் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு பின்னர் சொந்த ஊரில் தொழில் செய்ய வற்புறுத்தி கூறியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த ராஜா தொடர்ந்து தாயாருடன் தகறாறில் ஈடுபட்டு வந்ததுடன் வீட்டில் இருந்து வெளியேறி அருகில் இருந்து மற்றொரு வீட்டில் தங்கியுள்ளார்.
இதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலுடன் ராஜா இருந்து வந்தததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனியாக வீட்டில் வசித்து வந்த ராஜா பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். உயிருக்கு போராடி கிடந்தவரை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாயாரிடம் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.