கம்பம் நகரில் இருசக்கர வாகனங்களை திருடி அவற்றின் பாகங்களை கேரளாவிற்கு விற்பனை செய்த 4 பேர்.

ராஜா

UPDATED: May 17, 2024, 6:42:43 PM

தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள கோட்டை மைதான பகுதியைச் சேர்ந்தவர் குமார் இவர் வாட்டர் சர்வீஸ் மையம் வைத்துள்ளார்.

இவரது மையத்தில் மேனேஜராக பணிபுரிந்த மணிகண்டன் என்பவர் மையத்தில் நிறுத்தி வைத்திருந்த நான்கு இரு சக்கர வாகனங்களை திருடி சென்றதாக கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரினை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் மணிகண்டன் அவரது நண்பர்களான தங்கப்பாண்டி, நாகேந்திரன்,

அருண் பாண்டி ஆகிய மூன்று பேருடன் சேர்ந்து கம்பம் மெட்டு சாலையில் பழைய இரும்பு கடை நடத்தி வரும் பிரபு என்பவர் கடையில் வைத்து இருசக்கர வாகனங்களை பிரித்து அதில் உள்ள உதிரி பாகங்களை கேரளாவிற்கு விற்பனை செய்வதற்காக முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.

விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார் மணிகண்டன், நாகேந்திரன், பிரபு, தங்கப்பாண்டி ஆகிய நான்கு பேரையும் கைது செய்து மேலும் தலைமறைவாக உள்ள அருண்பாண்டியை தேடி வருகின்றனர்.

இருசக்கர வாகனங்களை திருடி பிரித்து உதிரி பாகங்களை கேரளாவிற்கு விற்பனை செய்ய முயன்ற நான்கு பெயரை போலீசார் கைது செய்த சம்பவம் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

 

VIDEOS

RELATED NEWS

Recommended