ராமேஸ்வரத்தில் மீன்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி நாளை முதல் வேலை நிறுத்தம்

கார்மேகம்

UPDATED: Jul 7, 2024, 6:28:29 AM

மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

மீன்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் நாளை முதல் விசைப்படகு மீனவர்கள்  காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த போவதாக ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

( ஆலோசனை கூட்டம்)

ராமேஸ்வரம் துறைமுகத்தில் நேற்று அனைத்து விசைப் படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் மீனவர் சங்க பிரதிநிதி சகாயம் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

Latest Rameshwaram District News

கூட்டத்தில் தடைக்காலம் தொடங்குவதற்கு முன்பு வரையிலும் இறால் உள்ளிட்ட அனைத்து வகை மீன்களுக்கும் நல்ல விலை இருந்தது ஆனால் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வந்த பின்பு மீனவர்கள் பிடித்து வரும் இறால் கணவாய் நண்டு காரல் சங்காயம் உள்ளிட்ட அனைத்து வகை மீன்களின் விலையையும் வியாபாரிகள் ஒன்று சேர்ந்து குறைத்து விட்டனர்.

மீன்களின் விலையை குறைத்துள்ளதால் படகு உரிமையாளர்கள் அனைவருக்கும் அதிக நஷ்டம் ஏற்பட்டு வருகிறது இதனால் மீன்பிடி தொழிலே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

( வேலை நிறுத்தம் )

அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு மீனவர்கள் பிடித்து வரக்கூடிய இறால் உள்ளிட்ட அனைத்து வகை மீன்களுக்கும் நல்ல விலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாளை ( திங்கட்கிழமை) முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள்  மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக மீனவர் சங்க பிரதிநிதி சகாயம் கூறினார். 

 

VIDEOS

Recommended