உதகை அரசு தாவரவியல் பூங்காவில்  உலா வரும் கருஞ்சிறுத்தை.

அச்சுதன்

UPDATED: Jun 5, 2024, 9:33:37 AM

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதி கொண்ட மாவட்டமாகும் இங்கு யானை , காட்டு எருமை,கரடி ,மான், புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் அதிகளவில் வசிக்கக்கூடிய மாவட்டமாகும்..

இந்நிலையில் வனவிலங்குகள் வனத்தை விட்டு உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு சமீப காலமாக வரத் தொடங்கியுள்ளன இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகை உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் உலா வந்துள்ளது

இந்த காட்சியானது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது தற்பொழுது அந்த சிசிடிவி காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது இதனால் பூங்கா ஊழியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்..

உடனடியாக வனத்துறையினர் கருஞ்சிறுத்தை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பூங்கா ஊழியர்கள் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIDEOS

Recommended