• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • படப்பை அருகே குறைந்தழுத்த மின்சாரம், அதிகழுத்த மின்சாரம் என மாறி மாறி வருவதால் வாஷிங் மெஷின், பிரிட்ஜ் , மிக்ஸி ஏசி உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் சேதம்.

படப்பை அருகே குறைந்தழுத்த மின்சாரம், அதிகழுத்த மின்சாரம் என மாறி மாறி வருவதால் வாஷிங் மெஷின், பிரிட்ஜ் , மிக்ஸி ஏசி உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் சேதம்.

லட்சுமி காந்த்

UPDATED: Jun 5, 2024, 6:43:39 PM

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி பகுதியில் உள்ள கிருஷ்ணர் கோவில் தெரு, திருவீதியம்மன் கோயில் தெரு, அண்ணா தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது.

இந்த நகரில் ஓரளவு அதிகம் வசதி படைத்தவர்களும் கூலி வேலை மற்றும் சொந்த தொழில் செய்து வருபவர்களும் அதிகமாக வசித்து வருகின்றார்கள்.

கடந்த ஆட்சியில் மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகம் , தற்போது திமுக ஆட்சியில் மின்னழுத்தம் குறைந்த மாநிலமாக காணப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது அறிவிக்கப்படாத மின்வெட்டும் பல மாவட்டங்களில் தொடர்வதாக கூறப்படுகிறது . 

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்துள்ள வஞ்சுவாஞ்சேரி பகுதியில் கடந்த ஒரு வருடங்களாக மிக குறைந்த அழுத்த மின்சாரம் மற்றும் அவ்வப்போது உயர் அழுத்த மின்சாரம் என மாறி மாறி வருவதால்,

வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்களான மிக்ஸி, பிரிட்ஜ் , ஏசி , ஃபேன் ,ஹீட்டர் உள்ளிட்ட பல மின் சாதன பொருட்கள் டேமேஜ் அடைவதாக அப்பகுதி மக்கள் கரசங்கால் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர். 

கரசங்கால் பகுதியில் 230 கிலோ வாட் துணை மின் நிலையமும் , 110 கிலோ வாட் திறன் உடைய துணை மின் நிலையங்கள் இருந்தும் வஞ்சுவாஞ்சேரி கிருஷ்ணர் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் 'லோ வோல்டேஜ்' காரணமாக மின்சார பொருட்களை இயக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வெப்ப சலனம் காரணமாக வெப்ப அலை வீசுகின்ற இந்த நேரத்தில் லோ வோல்டேஜ் காரணமாக மின்னழுத்த பிரச்னை ஏற்பட்டதால் சிறு குறு தொழில் நடத்தும் நிறுவனங்கள் , ஊடுபயிர் செய்யும் சிறு விவசாயிகள், கை தொழில் செய்யும் சிறு தொழிலாளர்கள் என அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த துணை மின் நிலையங்களில் நிலவும் குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு காண, மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளரை சந்தித்து கடந்த ஒரு வருடங்களாக தொடர்ந்து மனு அளித்தும் பொதுமக்கள் கொடுக்கும் புகார்களுக்கு இதுவரையில் மின்சார வாரியம் எந்த விதமான தீர்வும் காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டை அப்பகுதி மக்கள் வைக்கின்றார்கள்.

மேலும் இந்த ஆட்சியில் மின் கட்டணத்தை அதிகம் வசூலிக்கின்றார்கள். ஆனால் மின்சார பிரச்சனை ஏதாவது இருந்தால் அதை கண்டு கொள்ளாமல் மின்வாரிய அதிகாரிகள் மெத்தனமாக நடந்து கொள்கின்றார்கள் என வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

VIDEOS

Recommended