பழனியில் போக்குவரத்து சிக்னல் இருக்கு ஆனால் இல்லை

கண்ணன்

UPDATED: May 24, 2024, 5:36:08 AM

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி முக்கிய பகுதியாக உள்ளது.இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பஸ்; கார் ; சரக்கு வாகனம் என ஏராளமான வாகனங்கள் ஆன்மீக ஸ்தலமாக கருதப்படும் பழனிக்கு வந்து செல்கிறது இதனையடுத்து பழனி நகரின் முக்கிய பகுதியான அடிவாரம் சாலை ;ரயில்வே பீடர்சாலை; காந்தி மார்க்கெட்;பழனி பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலை ஆகும்.

மேலும் பழனி - கோவை மற்றும் திண்டுக்கல் செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்த சாலையில் பயணிக்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த சாலையில் "போக்குவரத்து சிக்னல்" இருந்தும் அது செயல்படவில்லை. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் இப்பகுதியில் ஏற்படுகிறது.

மேலும் இந்த பகுதியில் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் உள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த போக்குவரத்து சிக்னல் அமைத்து மூன்று வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் ஒரு முறை கூட இந்த சிக்னல் ஆனது செயல்படவில்லை.

இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது என்பது அனைவராலும் எளிதில் காண முடிகிறது. மேலும் இந்த சிக்னல் இயங்கும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்கலாம்.

எனவே பழனி நகர போக்குவரத்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இது தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

மக்கள் ஆரோக்கியமான பயணம் மேற்கொள்ள போக்குவரத்து சிக்னல் மற்றும் ஒவ்வொரு வரும் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பயணிப்பதும் , கார்களில் சீட் பெல்ட் அணிந்து பயணிப்பது விபத்துக்கள் இல்லா , உயிர் இழப்புக்கள் இல்லாத அற்புதமான பயணமாக கட்டாயம் இருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது

எனவே பழனி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னலை சீர்செய்து 24 மணி நேரமும் இயக்க நடவடிக்கை எடுத்து, போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

 

  • 1

VIDEOS

RELATED NEWS

Recommended