- முகப்பு
- மாவட்டச் செய்தி
- இந்தோ பிரான்ஸ் யோகா மற்றும் தற்காப்பு கலை சிறப்பு பயிற்சி முகாம்
இந்தோ பிரான்ஸ் யோகா மற்றும் தற்காப்பு கலை சிறப்பு பயிற்சி முகாம்
கண்ணன்
UPDATED: May 22, 2024, 6:45:51 PM
மாமல்லபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்பு கலையின் சார்பில் வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி மற்றும் பித்தூன் நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ தலைமையில் ஏப்ரல் 22 ஆம் தேதி துவங்கி 28ஆம் தேதி வரை ஏழு நாட்கள் நடைபெற்ற இந்தோ பிரான்ஸ் யோகா மற்றும் தற்காப்பு கலை சிறப்பு பயிற்சி முகாமில்
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் நாகூரை சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் மற்றும் கல்பாக்கம் அனுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ் இருவரும் அந்நாட்டு வீரர்களுக்கு யோகா குங்ஃபூ ,தெற்கன் களரி மற்றும் சிலம்பம் ஆகியவற்றை அந்நாட்டு வீரர்களுக்கு கற்பித்தனர்
நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டனர் அனைவரும் மிகவும் உற்சாகத்துடன் பயிற்சி பெற்றுக் கொண்டனர். நம்முடைய பாரம்பரிய கலைகளைப் பற்றி மிகவும் ஆர்வமுடன் கற்றுக் கொண்டு வருடம் ஒருமுறை நீங்கள் எங்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
அதுபோல் பெல்ஜியம் மற்றும் சவுத் ஆப்பிரிக்கா நாடுகளுக்கும் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவர்களை மஞ்சூரியா குங்பூ இன்டர்நேஷனல் தலைவர் மல்லைசிஇ சத்யாஅவர்களும் செயலாளர் அசோக்குமார் மாஸ்டர் அவர்களும் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.