• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • புவனகிரி அருகே மாணவர்களின் கல்விக்கு தடை ஏற்படுத்தி, மன உளைச்சலை உருவாக்கும் டிஜிட்டல் பேனருக்கு தடை வருமா? 

புவனகிரி அருகே மாணவர்களின் கல்விக்கு தடை ஏற்படுத்தி, மன உளைச்சலை உருவாக்கும் டிஜிட்டல் பேனருக்கு தடை வருமா? 

சண்முகம்

UPDATED: May 18, 2024, 6:44:53 PM

கடலூர் மாவட்டம் புவனகிரி, காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தனியார் கல்வி நிறுவனங்களின் விளம்பர டிஜிட்டல் பேனர் அதிகம் வைக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் பேனர்களில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் புகைப்படம் மற்றும் மதிப்பெண் குறிப்பிட்டு தர வரிசைப் படுத்தப்பட்டிருக்கிறது. மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, அவர்களை கல்வி கற்பதில் தடை ஏற்படுத்தும் தனியார் பள்ளிகளின் இது போன்ற விளம்பரங்கள் கடந்த அதிமுக ஆட்சியில் தடை செய்யப்பட்ட நிலையில்,

தற்போது மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை இதனை எவ்வாறு அனுமதிக்கிறது என மாணவர்களின் பெற்றோர்களும் பொதுமக்களும் வேதனையோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கல்வி கற்பதில் மாணவர்களுக்கு எந்த விதமான பாகுபாடும் இருக்கக் கூடாது, சரியான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த ஆட்சியில் இது போன்ற முரண்பாடு விளம்பரங்கள் தடை விதிக்கப்பட்டது.

ஆனால் தற்போது விடியா அரசு இதனை எவ்வாறு அனுமதிக்கிறது ஏன் என மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கண்டிப்பாக இது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

உடனடியாக சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்களையும், மற்றும் தினசரி செய்தித்தாள்களில் வரும் இதுபோன்ற விளம்பரங்களுக்கும் கடுமையான தடை விதிக்க வேண்டும்.

முக்கியமாக சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள இதுபோன்ற டிஜிட்டல் பேனர்களை பார்க்கும் வாகன ஓட்டிகள், கவன சிதைவு ஏற்பட்டு விபத்தில் சிக்கி உயிராபத்து ஏற்படும் நிலையும் இருந்து வருவதை குறிப்பிட்டே தீர வேண்டும் என அவர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

 

VIDEOS

Recommended