• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருத்தணி அருகே கார் கண்டெய்னர் நேருக்கு நேர் மோதி காரில் பயணம் செய்த ஐந்து பேர் பலி இரண்டு பேர் படுகாயம்.

திருத்தணி அருகே கார் கண்டெய்னர் நேருக்கு நேர் மோதி காரில் பயணம் செய்த ஐந்து பேர் பலி இரண்டு பேர் படுகாயம்.

சுரேஷ் பாபு

UPDATED: Aug 11, 2024, 5:43:18 PM

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி

தாலுகா ராமன்சேரி என்ற இடத்தில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் வந்த கல்லூரி மாணவர்கள் வந்த கார் சென்னையில் வானகரத்தில் இருந்து வந்த கண்டைனர் லாரி நேருக்கு நேர் மோதியதில் சொகுசு காரில் பயணம் செய்த ஐந்து பேர் உடல் சிதறி பலியானார்கள் 

இந்த கண்டைனர் லாரி சென்னை வானகரத்தில் இருந்து வட மாநிலம் ராஜஸ்தான் பகுதிக்கு செல்கிறது இந்த டிரைவர் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி செல்ல முயன்ற போது கணம்சத்திரம் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து

இந்த சொகுசு காரில் பயணம் செய்த ஏழு பேர் ஐந்து பேர் இறந்துள்ளனர் இதில் ஐந்து பேர் அந்த பகுதியில் உடல் சிதறி பலியானார்கள் படுகாயம் அடைந்த இரண்டு பேர் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் அந்த காரில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் நேரடி கண்காணிப்பில் போலீசார் பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடல்களை காரில் இருந்து போராடி மீட்டனர்.

விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச்சென்று கனகம்மாசத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Thiruvallur News

இந்த விபத்தில் இறந்து போன மாணவர்கள் ஐந்து பேர் ஆந்திர மாநிலம் ஓங்கோல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் சென்னை அருகில் உள்ள எஸ்ஆர்எம் தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் என்று போலீசார் முதல் கட்ட தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்  கனகம்மாசத்திரம் போலீசார்

இந்த விபத்து காரணமாக சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended