தூய்மை பணியாளர்கள், வேதா நிறுவன ஊழியருடைய இடையே கைகலப்பு

JK

UPDATED: Oct 23, 2024, 11:38:27 AM

திருச்சி

மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் அன்றாடம் சேர்ந்து சுமார் 400 டன் குப்பைகளை அகற்றும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் புதுக்கோட்டை சேர்ந்த வேதா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இதில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி நேற்று மாலை 6 மணி முதல் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் விடிய விடிய போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று காலை தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிற பொழுது போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு வரும்படி அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

தூய்மை பணியாளர்கள்

பேச்சு வார்த்தைக்கு நிர்வாகிகள் சென்றபோது வேதா நிறுவனத்தின் ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்களிடம் மிரட்டும் துணியில் பேச ஆரம்பித்தனர். 

இதை அறிந்த பேச்சு வார்த்தைக்குச் சென்ற நிர்வாகிகள் உடனடியாக மீண்டும் திரும்பி வந்த பொழுது வேதா நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Breaking News Today In Tamil 

இதனை கண்ட காவல்துறை உடனடியாக அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர் ஆனால் நிறுவனத்தில் ஊழியர்கள் தங்களை தாக்க முற்பட்டதாக அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் வலியுறுத்தி கோஷமிட்டனர். 

பின்னர் காவல்துறையின வேதா நிர்வாக ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அவர்கள் அப்புறப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு காவல்துறையினர் அதிகாரியிடம் அழைத்துச் சென்றனர்.

 

VIDEOS

Recommended