திருச்சி இரயில்வே பாதுகாப்பு குறித்த பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

JK

UPDATED: Oct 26, 2024, 11:01:30 AM

திருச்சி

ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் பிரமோத்நாயர் ஆகியோர்களது உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செபாஸ்டியன் தலைமையில் திருச்சி செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

அப்போது ரயில் தண்டவாளத்தை கடந்து விபத்தில் சிக்கி உங்கள் விலைமதிப்பற்ற உயிரை இழக்காதீர்கள், ரயில் தடங்கள் ரயில்களுக்கு மட்டுமே, ரயிலின் படியில் பயணம் செய்வது உயிருக்கு ஆபத்தானது, ஓடும் அல்லது நகரும் ரயில்களில் நுழையவோ, ஏறுவதையோ தவிர்க்க வேண்டும்

Latest Trichy News Today 

ஓடும் ரயில்கள், ரயில் பாதைகளுக்கு அருகில் செல்ஃபி எடுக்க கூடாது, ரயில் பாதையில் கல்லை வைப்பது ஆயிரக்கணக்கான பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயலாகும், ரெயில்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் பட்டாசுகள் போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல கூடாது 

மேலும், அதன் தீவிரத்தன்மை மற்றும் விளைவுகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து திரளாக கொண்டனர்.

 

VIDEOS

Recommended