- முகப்பு
- மாவட்டச் செய்தி
- அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு.
வேல்முருகன்
UPDATED: May 15, 2024, 7:50:23 AM
District News
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை பட்டவகுப்புகளுக்கான (B.A.) தமிழ், (B.A.) ஆங்கிலம், (B.Com.,) வணிகவியல், (B.Sc.,) கணிதம் மற்றும் கணினி அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் http://www.tngasa.in மற்றும் https://tngasa.org மூலமாக 06-05-2024 முதல் 20-05-2024 வரை விண்ணப்பிக்கலாம்.
அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
இதில் விண்ணப்பிக்கும் போது தங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, விண்ணப்பதாரர் அல்லது பெற்றோர்களின் தொடர்பு கொள்ளக்கூடிய சரியான தொலைபேசி எண் போன்ற விவரங்களை பதிவு செய்து பின் கல்லூரியில் உள்ள தகுதியான பாடப்பிரிவு அனைத்திற்கும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக்கட்டணம் ரூ.48/- பதிவுக்கட்டணம் ரூ.2/- என மொத்தம் ரூ.50/- (ஒவ்வொரு ஐந்து கல்லூரிக்கும்) செலுத்தவேண்டும். SC/ST பிரிவினருக்கு ரூ.2/- பதிவுக்கட்டணம் (ஒவ்வொரு ஐந்து கல்லூரிக்கும்) செலுத்த வேண்டும். மேலும் கல்லூரியில் மாணவர் வசதி மையம் (Student Information Centre) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
Today District News
விண்ணப்பக்கட்டணத்தை கல்லூரியில் நேரடியாகவோ, கிரெடிட் கார்டு, டெபிட் (ATM) கார்டு மற்றும் இணைய வங்கி (Net Banking) மூலமாகவும் செலுத்தலாம். தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
மாற்றுத்திறனாளி, விளையாட்டுப்பிரிவு மற்றும் முன்னாள் இராணுவத்தினர் குழந்தைகள் மற்றும் தேசிய மாணவர்படை ‘A’ சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
District News and Updates
இந்த சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் அதற்கான தரவுகளை பதிவேற்றம் செய்யவேண்டும். மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட்டுப் பிரிவில் சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க இயலும்.
விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப் பட்டியல் தயார் செய்தபின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கப்படும் என கல்லூரி முதல்வர் முனைவர் க. இரமேஷ் தெரிவித்துள்ளார்.