- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 70 ஆண்டுகளுக்குப் பிறகு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி.
பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 70 ஆண்டுகளுக்குப் பிறகு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி.
S.முருகன்
UPDATED: May 28, 2024, 10:54:12 AM
Poonamallee Sri Thirukachinambigal Temple
பூந்தமல்லியில் உள்ள மிகவும் பழமையான திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 70 ஆண்டுகளுக்குப் பின்னர் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
பூந்தமல்லி அருள்மிகு திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த மே 20 ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
Spiritual News In Tamil
இதையொட்டி சுவாமி சிம்மா வாகனம், யாளி வாகனம், கருட வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, அனுமந்த வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
முன்னதாக புஷ்பவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாள் மற்றும் திருக்கச்சி நம்பிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. தினமும் காலை மாலை திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரமோற்சவ விழாவையொட்டி திருமஞ்சனம் செய்து மோனா பல்லக்கில் சுவாமி எழுந்தருளினார் . இதனைத் தொடர்ந்து 70 ஆண்டுகளுக்குப் பின்னர் சக்கரத்தாழ்வார் கோயில் திருக்குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் மாதவன் அறங்காவலர் குழு தலைவர் பாபு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், கோபிநாத் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.