• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பொன்னேரியில் கோடை வெயில் தாக்கம் காரணமாக கடல் மற்றும் ஏரியில் குளித்த ஒருவர் பலி ஒருவர் மாயம்.

பொன்னேரியில் கோடை வெயில் தாக்கம் காரணமாக கடல் மற்றும் ஏரியில் குளித்த ஒருவர் பலி ஒருவர் மாயம்.

S.முருகன்

UPDATED: May 2, 2024, 6:35:19 PM

திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு லைட் ஹவுஸ் கடற்கரையில் அன்னை சத்யா நகர்,மூலக்கடை சென்னையைச் சேர்ந்த செந்தில்நாதன் (வயது 40) த/பெ. ராஜகோபால் என்பவர் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு மதுபோதையில் அரங்கம்குப்பம் அருகில் கடலில் குளிக்கச் சென்றபோது ராட்சத கடல் அலையில் சிக்கிய நிலையில் அருகிலிருந்தவர்கள் மீட்டு இருசக்கர வாகனத்தில் பழவேற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

செந்தில்நாதனை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த இறப்பு தொடர்பாக திருப்பாலைவனம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின்பேரில் காவல்துறையினர் மேற்படி பிரேதத்தினை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

இதேபோன்று மீஞ்சூர் அருகே உள்ள கல்பாக்கம் ஏரியில் நேற்று நண்பர்களுடன் குளிக்க சென்ற கரண் என்ற முன்னாள் இன்ஜினியரிங் மாணவர் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று மாயமானார். அவரை நேற்று தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக தேடி வந்த நிலையில் கிடைக்காததால் இரவு தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

மீண்டும் காலையில் தேடும் பணி தொடர்ந்து வரும் நிலையில் கோடை வெயிலில் உஷ்ணம் தாங்காமல் இளைஞர்களும் குழந்தைகளும் நீர்நிலைகளை நாடி குளிக்க ஆசைப்பட்டு உயிர் இழக்கும் சூழல் தற்போது நிலவி வருவதால்

கடல் மற்றும் ஏரி போன்ற நீர் நிலைகளில் குளிக்க விரும்புவோர் பாதுகாப்பான முறையில் நீச்சல் தெரிந்தவர்களை அருகில் வைத்துக் கொண்டு குளிக்க வேண்டும் எனவும் 

ஆழம் தெரியாமல் கடலிலோ ஏரியிலோ அல்லது நீர் நிலைகளிலோ இறங்க வேண்டாம் எனவும் முடிந்தவரை கரையிலேயே குளிக்க வேண்டும் எனவும் பொது மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

  • 1

VIDEOS

Recommended