பாம்பன் தங்கச்சி மடத்தில் பலத்த மழை.

கார்மேகம்

UPDATED: May 15, 2024, 12:54:22 PM

District News

பாம்பன் தங்கச்சி மடம் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவு பகுதியிலும் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது

இதற்கிடையே ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் பகல் 12 மணியளவில் பலத்த மழையாக பெய்தது.

Ramanathapuram District News

இந்த மழையால் சாலைகளில் மழை நீர் ஆறு போல் ஓடியது மழை நீர் வடிகாலில் முறையாக பணிகள் நடைபெறாத தால் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நின்றது

இதனால் அனைத்து வாகனங்களும் நீரில் ஊர்ந்த படியே சென்றன இதேபோல பாம்பன் பகுதியிலும் நேற்று அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது

Ramanathapuram News Today

கடந்த வாரம் வரை வெயில் வாட்டி வதைத்த நிலையில் பாம்பன் தங்கச்சி மடம் பகுதியில் பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்

பாம்பன் தங்கச்சிமடம் பகுதியில் பலத்த மழை பெய்த போதிலும் ராமேஸ்வரம் பகுதியில் சிறு சாரல் கூட பெய்யாமல் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended