குன்றத்தூரில் சிக்கிய 23 டன் குட்கா பள்ளம் தோண்டி தீ வைத்து எரிக்கப்பட்டது.

S.முருகன்

UPDATED: Jun 29, 2024, 5:26:13 AM

குன்றத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட குட்காவை குன்றத்தூர் போலீசார் பறிமுதல் செய்து அதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வெளி மாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை குன்றத்தூர் போலீசார் ஒரு இடத்தில் வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை அழிக்கும் பணியில் குன்றத்தூர் போலீசார் ஈடுபட்டனர்.

இதையடுத்து குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு பின்பகுதியில் உள்ள காலி இடத்தில் பள்ளம் தோண்டி அதில் பறிமுதல் செய்யப்பட்ட 23 டன் குட்காவை கொட்டி தீ வைத்து எரித்து பின்னர் மண்ணை கொட்டி மூடினார்கள்.

குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னிலையில் 23 டன் குட்காவை பள்ளம் தோண்டி கொட்டி தீ வைத்து எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended