புது இருசக்கர வாகனத்தை பட்டப் பகலில் அசால்டாக திருடிச் செல்லும் இளைஞர்கள்.
செ.சீனிவாசன்
UPDATED: Oct 2, 2024, 9:13:11 AM
நாகப்பட்டினம் மாவட்டம்
நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருகிறது.
பெரும்பாலும் மர்ம நபர்களால் இருசக்கர வாகனங்கள் இரவு வேளையில் மட்டும் திருடப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது பகலிலும் தங்களது கைவரிசையை திருடர்கள் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் திருக்குவளை அடுத்த வலிவலம் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் தனது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் காணாமல் போய் உள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இருசக்கர வாகனம் திருட்டு
இந்நிலையில் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது பட்டப் பகலிலேயே இளைஞர்கள் இருவர் நோட்டமிட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
இதன் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
நாகை அருகே வலிவலத்தில் பட்டப் பகலிலேயே எந்தவித அச்சமும் இன்றி இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு