• முகப்பு
  • குற்றம்
  • செய்யாறில் பட்டப் பகலில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம் 2 சவரன் செயினை பறித்த 2 கொள்ளையர்கள்.

செய்யாறில் பட்டப் பகலில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம் 2 சவரன் செயினை பறித்த 2 கொள்ளையர்கள்.

அஜித் குமார்

UPDATED: Jul 9, 2024, 11:36:24 AM

செய்யாறில் பட்டப் பகலில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம் இரண்டுசவ ரன் செயினை பறித்த காஞ்சிபுரத்தை சேர்ந்த இரண்டு வாலிபர்களை போலீசார் நேற்று கைது செய்து சிறை யில் அடைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் கீழ்புதுப்பாக் கம் டாக்டர் ராமதாஸ் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகள் அமிர்தவர்ஷினி (23), பிஎஸ்சி வேளாண் பட்ட தாரியான இவர் வங்கி தேர்வுக்காக வீட்டில் படித்து வருகிறார்.

இவர் கடந்த 2ம் தேதி மதியம் 2.15 மணி அளவில் ஆற்காடு சாலையில் உள்ள நூலகத்தில் படித்துவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது கீழ்ப்புது பாக்கம் வீட்டில் இருந்து வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த வாலிபர் ஒருவர் அமிர்த வர்ஷினி கழுத்தில் அணிந் திருந்த இரண்டு சவரன் செயினை அறுத்து தப்பி ஓடினார்.

அப்போது அமிர்த வர்ஷினி கூச்சலிட்டார். ஆட்கள் வருவதற்குள் அப் போது சற்று தொலைவில் தயார் நிலையில் இருந்த மற்றொரு நபர் பைக்கில் ஏறி சென்றார்.

இதுகுறித்து அமிர்தவர் ஷினி செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து புகாரின் அடிப்படையில் வாலிப ரின் அங்க அடையாளங் கள் மற்றும் அந்த வாலிபர் கள் பயன்படுத்திய பைக் எண் வைத்து அந்தப் பகுதியில் பதிவாகியிருந்த சீசி டிவி கேமரா பதிவுகளை கொண்டு அந்த மர்ம நபர் களை செய்யாறு பகுதியில் நேற்று பிடித்தனர்.

அதில் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதி விஸ்வ நாதன் தெருவை சேர்ந்த கிருத்திக் ரோஷன்(22) என்பதும், அவரது நண்பன் காஞ்சிபுரம் கலெக்டர் ஆபீஸ் அருகில் உள்ள வடி வேல் நகர் பகுதி சேர்ந்த பிரதீப்குமார் (23) என்பதும் தெரிய வந்தது. அவர்க விடம் இருந்து 2 சவரன் நகையையும், பைக்கை யும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் போலீசார் விசாரணையில் கிருத்திக் ரோஷன் பிகாம் முடித் துவிட்டு வழக்கறிஞராக அஞ்சல் வழியில் படித்து வருவதும், பிரதீப் குமார் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் முடிந்து காஞ்சிபுரத்தில் செல் போன் கடையில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்துள்ளது.

செயின் பறிப்பு சம்ப வத்தில் இருவரையும் போலீசார் கைது செய்து செய்யாறு குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

VIDEOS

Recommended