கோயம்பேட்டில் கிறிஸ்துவ போதகர்களுக்கு கொலை மிரட்டல் விடுவித்த வழக்கில் பா.ஜ.க.பிரமுகர்கள் இருவர் கைது.
பிரேம்
UPDATED: Apr 14, 2024, 2:55:37 PM
சென்னை,கோயம்பேடு அருகே நெற்குன்றம் பகுதியில் கடந்த மாதம் 28ம் தேதி அன்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ போதகர்கள் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த பா.ஜ.க பிரமுகர்கள் பிச்சாண்டி(48), இவரது நண்பர் பிரகாஷ்(43), ஆகிய இருவரும் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுவித்தனர்.
இது தொடர்பான வீடியோ இணைதளத்தில் வேகமாக பரவியது. இது குறித்து நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் யோவான்(29), என்பவர் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல் விடுத்த பிச்சாண்டி மற்றும் பிரகாஷ் ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நிலையில் பா.ஜ.க. பிரமுகர்கள் பிச்சாண்டி என்கிற ஜென்டில்மேன் பிச்சாண்டி (மதுரவாயல் தொகுதி கிழக்கு மண்டல தலைவர் BJP) மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
ALSO READ | 2029- ல் ஒரே நாடு ஒரே தேர்தல்.
இவர்கள் மீது ஆபாச வார்த்தைகளால் பேசுவது, கொலை மிரட்டல் விடுவிப்பது உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு