சின்னமனூரில் தேனி மாவட்ட பொருளாதர குற்ற பிரிவு போலீஸார் தனியார் நிதி நிறுவனத்தில் சோதனை முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.
இரா.இராஜா
UPDATED: Apr 28, 2024, 8:50:10 AM
தேனி மாவட்டம் சின்னமனூர் மேகமலை சாலையில் அமைந்துள்ள எஸ், எம்.சி. கூட்டுறவு வீட்டு வசதி சொசைடி லிட் என்ற பெயரில் இயங்கி வந்த தனியார் நிறுவனம் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இந்த நிறுவனங்கள் இயங்கி வந்ததாகவும்
இந்த நிறுவனத்தில் ஏராளமான பொதுமக்கள் வைப்பு நிதி செலுத்தி வந்தததாகவும் கடந்த சில மாதங்களாக வைப்பு நிதி வைத்திருந்தவர்களுக்கு வட்டி பணம் வராததால் இந்த நிறுவனத்தை நம்பி ஏமாந்த மக்கள் பொதுமக்கள் மாவட்ட பொருளாதார குற்ற பிரிவு போலிசாருக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள எஸ், எம்.சி. கூட்டுறவு வீட்டு வசதி சொசைடி லிட். நிறுவனத்தில் மாவட்ட பொருளாதார குற்ற பிரிவு போலீஸார் சோதனை செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சின்னமனூரில் தேனி மாவட்ட பொருளாதார குற்ற பிரிவு ஆய்வாளர் மலர்விழி தலைமையில் இன்று சின்னமனூரில் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனை நேற்று காலை 9.30, மணிக்கு துவங்கி தற்போது வரை முடிவுக்கு வாராமல் நடைபெற்று வருகிறது.
கூட்டுறவு சொசைட்டி என்ற தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் வங்கி பெயரை தனி நபர் தனது சுய இலாபத்திர்க்கு பயன்படுத்தி பொது மக்களை ஏமாற்றியது தற்போது ஏமாந்த பொதுமக்கள் மூலம் வெளிச்சத்திற்க்கு வந்துள்ளது.