நாகை அருகே புதிய மின்மாற்றி உடைத்து இரண்டு லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகள் திருட்டு
செ.சீனிவாசன்
UPDATED: Aug 23, 2024, 7:18:42 AM
நாகை மாவட்டம்
கீழ்வேளூர் அருகே பட்டமங்கலம் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் தொடர்ச்சியாக அப்பகுதியில் மின் பற்றாக்குறை காரணமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வந்தது
இந்த நிலையில் பட்டமங்கலம் ஊராட்சி சார்பில் புதிய மின்மாற்றி அமைக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அதன் பேரில் மின் பற்றாக்குறையை போக்குவதற்காக இலுப்பூர் சத்திரம் அருகே தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் புதிய மின்மாற்றி அமைப்பதற்கு கடந்த 20 நாட்களுக்கு முன் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது
Latest Crime News
இந்த நிலையில் இரவு மர்ம நபர்கள் அந்த மின்மாற்றியில் பொருத்த்தியிருத்த இரும்பு போல்ட்டுகளை உடைத்து உள்புறம் இருந்த சும்மா இரண்டு லட்சம் மதிப்பிலான காப்பர் வைண்டிங் காயில் கம்பிகளை திருடி சென்றனர்.
இது குறித்து கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் கீழ்வேளூர் மின்சார வாரிய இளநிலை மின் பொறியாளர் கொடுத்தார்.
புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.