கஞ்சா விற்பனை செய்ய முட்புதரில் பதுங்கி இருந்த வாலிபன்
லட்சுமி காந்த்
UPDATED: Aug 12, 2024, 7:51:42 PM
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே சிறு காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு பக்கத்தில் முள் புதர்களில் மறைந்திருந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமுல் பிரிவு உதவி ஆய்வாளர் எஸ்.சந்திரசேகரன் அவர்களுக்கு ரகசிய தகவல் வந்தது.
அதனை அடுத்து மதுவிலக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு பக்கவாட்டில் முட் புதரில் பதுங்கி இருந்த வாலிபர் ஓருவரை மடக்கி பிடித்தனர்.
அவரிடம் விசாரித்த போது, விநாயகபுரம் பச்சையம்மன் கோவில் பகுதியை சேர்ந்த வேலு என்பவரின் மகன் வெங்காயம் என்ற வெங்கடேசன் வயது (24) என தெரியவந்தது.
கஞ்சா
மேலும் அவர் மறைத்து வைத்திருந்த பெரிய சைஸ் பிளாஸ்டிக் கவரை சோதித்த போது, அதில் 1 கிலோ 400 கிராம் எடையுள்ள உலர் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது .
கஞ்சாவை காவல்துறையினர் சோதித்துக் கொண்டிருந்தபோதே, தப்பி ஓட முயன்ற வெங்காயம் என்ற வெங்கடேசனை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 400 கிராம் உலர் கஞ்சாவை கைப்பற்றி மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு வந்து தீவிர விசாரணை செய்தனர்.
விசாரணயில் பாலு செட்டி சத்திரம் காவல் எல்லைக்கு உட்பட்ட விநாயகபுரத்தில் வசிப்பதாகவும், எங்கள் வீட்டிலிருந்து சற்று தொலைவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு மற்றும் தமிழ்நாடு பாடப் புத்தக நூல் கழகம், மற்றும் அரசு பணிமனை போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பல அரசு துறைகள் உள்ளது.
Latest Crime News
அதில் கூலி வேலை செய்கின்ற மூட்டை தூக்கும் தொழிலாளிகளும், கூலித் தொழிலாளிகளும் கஞ்சாவை விற்பனை செய்து வருகிறேன் என வெங்காயம் என்ற வெங்கடேசன் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வெங்காயம் என்ற வெங்கடேசனை மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.