• முகப்பு
  • குற்றம்
  • பெட்டிக்கடையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் உள்ளே புழு.

பெட்டிக்கடையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் உள்ளே புழு.

செ.சீனிவாசன்

UPDATED: Jul 30, 2024, 7:46:08 PM

நாகப்பட்டினம் மாவட்டம்

நகர பகுதியில் பரபரப்பாக உள்ள பிரதான சாலையான பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள பெட்டிக்கடையில் இன்று காலை வாடிக்கையாளர் ஒருவர் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் வாங்கியுள்ளார்

அதில் இறந்த நிலையில் புழு ஒன்று அவருக்கு தென்பட்டுள்ளது  அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்.

குடிநீர்ல் புழு 

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் கடைகளில் சோதனை மேற்கொண்டார். 

குடிநீர் பாட்டில்கள் உணவு பாதுகாப்புத்துறை பதிவுச் சான்று பெறப்பட்டிருக்கிறதா தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி உள்ளிட்ட விபரங்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டார். 

அதனைத் தொடர்ந்து மொத்த விநியோகம் செய்யும் நிறுவனத்திலும், அந்த குறிப்பிட்ட கம்பெனியின் சப்ளை வாகனமும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

Tamil Nadu Crime News

மேலும் வருகின்ற குடிநீர் மற்றும் குளிர்பானங்களை இயன்றவரை பார்த்து கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்க அறிவுரை வழங்கப்பட்டது. 

மேலும் புகாருக்கு உள்ளான நிறுவனம் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி-யில் செயல்படுவதால் அதனை ஆய்வு செய்ய சம்மந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாகையில் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்பட்ட குடிநீர்ல் புழு இருந்த விவகாரம் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

 

VIDEOS

Recommended