கும்பகோணம் அருகே 100, 200, 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ரமேஷ்
UPDATED: Apr 28, 2024, 7:49:09 PM
கும்பகோணம் அருகே சாக்கோட்டை பகுதியில் உள்ள மளிகை கடையில் டிப்டாப் ஆசாமி ஒருவர் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றுள்ளார்.
இதுகுறித்து மளிகை கடை உரிமையாளர் செல்போன் மூலம் அந்த ஆசாமிக்கு தெரியாமல் நாச்சியார் கோவில் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துவிட்டு அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
உஷாரான அந்த ஆசாமி அங்கிருந்து தான் இருசக்கர வாகனம் மற்றும் கொண்டு வந்த கைப்பையை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நாச்சியார் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் சுகுணா, மற்றும் காவல்துறையினர் அந்த நபர் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில் 100, 200, 500 ரூபாய் கள்ள நோட்டுகளாக ரூ.32,100 இருப்பது தெரியவந்தது.
அவற்றை கைப்பற்றிய காவல்துறையினர் தப்பி ஓடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு