• முகப்பு
  • குற்றம்
  • புதிய சட்ட திருத்தத்தின் அடிப்படையில் திருச்சி மாநகர காவல்துறையில் முதல் வழக்கு உறையூர் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது.

புதிய சட்ட திருத்தத்தின் அடிப்படையில் திருச்சி மாநகர காவல்துறையில் முதல் வழக்கு உறையூர் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது.

JK

UPDATED: Jul 2, 2024, 6:43:57 PM

திருச்சி, உறையூர் களத்து மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் தன்ராஜ் (43). மதுபோதைக்கு உள்ளான அவர் அடிக்கடி போதையில் குடும்பத்தினரிடம் தகாறில் ஈடுபடுவது வழக்கம்.நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, அறைக்குச் சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறையில் சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டபடி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து உறையூர் காவல்துறையினர் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இயற்கைக்கு மாறான அதாவது இதுபோன்ற சந்தேக மரணங்களை ஐபிசி 174 பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்வது வழக்கம். 

ஆனால் புதிய சட்ட திருத்தத்தின் படி இந்த வழக்கை பிஎன்எஸ்எஸ் 194 என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

திருத்தப்பட்ட புதிய சட்ட விதிமுறைகள் ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருச்சி மாநகர காவல்துறையில் திருத்தப்பட்ட சட்ட பிரிவுகளின் அடிப்படையில் பதிவான முதல் வழக்கு இதுவாகும்.

தமிழகம் முழுவதும் இந்த புதிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் திருச்சியில் வழக்கறிஞர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டமும், 2வது நாளாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நாளை மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு 3வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

இந்நிலையில் திருச்சி மாநகரத்தில் முதல் வழக்கு புதிய சட்ட திருத்தத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended