மயிலாடுதுறையில் வீட்டினை அபகரித்து வயதான தாய் , தந்தையினரை விரட்டியடித்து வாட்ஸ் அப்பில் அறிவாலை அனுப்பி மிரட்டிய மகன்
செந்தில் முருகன்
UPDATED: Apr 24, 2024, 8:33:33 PM
மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரில் உள்ள லூர்து நகரில் வயதான கணேசன்(80) மற்றும் காது கேளாத ராஜபாக்கியம்(78) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மதிவாணன் மற்றும் ராஜு என்கின்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
மேலும் இவர்கள் கட்டிய இரண்டு வீட்டினை இரு மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்த நிலையில் மதிவாணன் வீட்டில் வயதான தம்பதியினர் குடியிருந்து வந்துள்ளனர்.
இதனிடையே இளைய மகன் மதிவாணன் வயதான தம்பதியினரை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு அனுப்பியுள்ளார்.
அதுமட்டுமின்றி அறிவாளை வாட்ஸப்பில் மருமகளுக்கு புகைப்படமாக அனுப்பி மாமனார் மற்றும் மாமியார் இருவரையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் தற்போது மூத்த மகன் ராஜு வீட்டில் வசித்து வரும் நிலையில் தனது சிறிய மகன் மதிவாணன் திட்டமிட்டு வீட்டினை எழுதி வாங்கிக்கொண்டு தங்களை விரட்டியதாகவும் ,
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறி முதியவர் கணேசன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலையிடம் மனு அளித்தார்.
தொடர்ந்து சிறிய மகன் மதிவாணன் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுத்து தனது வீட்டினை மீட்டு தர வேண்டும் என்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.