பிபிஜிடி சங்கர் கொலை வழக்கில் கடந்த 11 மாதமாக சிறையில் இருந்து வெளியே வந்த குற்றவாளி மர்ம மரணம்.
சுரேஷ் பாபு & ராஜ்குமார்
UPDATED: Apr 13, 2024, 9:02:23 PM
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும் பிரபல ரவுடியுமான பி பி சி டி சங்கர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பூந்தமல்லி அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு 15 ஆவது வார்டு கவுன்சிலர் சாந்தகுமார் என்கிற சாமு உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்,
இதனை அடுத்து கடந்த வாரம் சனிக்கிழமை கச்சிப்பட்டு சாந்தகுமார் உள்ளிட்ட 7 பேரும் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த நிலையில் இன்று குற்றவாளிகள் 7 பேரும் திருவள்ளூர் அடுத்த புட்லூர் பகுதியில் உள்ள அவரது வழக்கறிஞர்களை சந்திக்க வந்ததாக கூறப்படும் நிலையில் செவ்வாய்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்
இந்த நிலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கச்சிப்பட்டு 15 ஆவது வார்டு கவுன்சிலர் சாந்தகுமார் என்கிற சாமு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிழந்தார்.
மேலும் சாந்தகுமாருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் அதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் உயிரிழந்ததாகவும் செவ்வாய்பேட்டை போலீஸ் தரப்பில் கூறப்படும் நிலையில்
சாந்தகுமாரின் மனைவி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட எனது கணவர் சாந்தகுமார் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்ததாகவும் அவருக்கு உடலில் எந்தவித வியாதியும் இல்லாத நிலையில் சாந்தகுமார் உயிரிழந்ததாக போலீசார் கூறுவது நம்பும்படி இல்லை
எனவே எனது கணவரின் இறப்பிற்கு காவல் துறையினரே காரணம் எனவும் இதற்கு தகுந்த நீதி கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ALSO READ | கோவை - அண்ணாமலை மீது மற்றொரு புகார்.
கொலை வழக்கில் சிறையில் இருந்த கைதி ஒருவர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மேலும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.