• முகப்பு
  • குற்றம்
  • சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொடர்பில் இருந்த தொழிலதிபரும், அதிமுக நகர் மன்ற உறுப்பினர், தமிழகம் முழுவதும் பெரும் பர.. பரப்பு...

சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொடர்பில் இருந்த தொழிலதிபரும், அதிமுக நகர் மன்ற உறுப்பினர், தமிழகம் முழுவதும் பெரும் பர.. பரப்பு...

மாமுஜெயக்குமார்

UPDATED: Mar 3, 2023, 3:10:32 PM

 

சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொடர்பில் இருந்த தொழிலதிபரும், அதிமுக நகர் மன்ற உறுப்பினர், சமுதாய அமைப்பின் தலைவர் உள்பட ஐந்து பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழகத்தில் சமீப காலமாக சிறுமிகள், பெண்களிடம் பாலியல் செய்வது, பாலியல் ரீதியாக அலைபேசியில் பேசி அவர்களது மனதை களங்கச் செய்வது என்பது தொடர் கதையாக நடந்து வருகிறது.

தற்போது, பள்ளி - கல்லூரிகளில் பயிலும் மாணவியர்களை கல்வி பயிற்று விக்கும் ஒருசில ஆசிரியர்கள்-பேராசிரியர்கள் குறி வைத்து இது போன்ற அநாகரீகச் செயல்களில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. 

சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தீவிரமான விசாரணைக்குப் பிறகு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட ஒரு சில காலங்களில் ஜாமீன், விடுதலை என வெளி வருவதாலேயே இதுபோன்ற அநாகரீகச் செயலை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வருவதை கண் கூடாக காண முடிகிறது.

இந்நிலையில்,ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொடர்பில் இருந்த தொழிலதிபரும், 3-வது வார்டு அ.தி.மு.க.நகர்மன்ற உறுப்பினர் சிகாமணி, சமுதாய அமைப்பின் தலைவர் புதுமலர் பிரபாகரன், ராஜா முகமது மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த கயல்விழி,உமா ஆகியோர் மீது சிறுமியின் பெற்றோர் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் புகார் அளித்ததின் அடிப்படையில்,

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை பரமக்குடிக்கு நேரில் வந்து காலை முதல் மாலை வரை பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்ததில், இவர்களுடைய புகார் உண்மை நிலவரம் தெரிய வந்துள்ளது.

அதன் பேரில், பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட புகாரின் பேரில், பரமக்குடி காவல்துறை துணை கண்காளிப்பாளர் காந்தி ஆலோசனையின்பேரில், மகளிர் போலீஸார்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 5 பேர்களையும் கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வரலாமென தெரிய வருகிறது.

இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை மூலம் தண்டிக்கப்பட வேண்டுமென அரசியல் கட்சியினர், மகளிர் அமைப்பினர்கள் கோரிக்கை வைத்து வலியுறுத்தியதோடு, சட்டங்கள் சரியாக இருப்பின் இது போன்ற கொடுமையான தவறுகள் நடைபெறாமல் தடுக்க முடியுமெனவும் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் பரமக்குடி நகர் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் பெரும் பர.. பரப்பை... ஏற்படுத்தியுள்ளது...

 

VIDEOS

Recommended