தந்தையை கொடூரமாக தாக்கும் மகன் வீடியோ வைரல்

மாரியப்பன்

UPDATED: Apr 27, 2024, 5:58:40 AM

பெரம்பலூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள ரைஸ் மில் உரிமையாளர் குழந்தைவேல் எனது வீட்டில் அமர்ந்திருந்த போது அவரது மகன் சந்தோஷ் , தகப்பனார் குழந்தைவேலுவை கொடூரமாக தாக்கியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

 

கடந்த பிப்ரவரி16ம் தேதி இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்ற நிலையில் கடந்த 17ம்தேதி கிருஷ்ணா புரத்தில் உள்ள அவரது வீட்டில் குழந்தைவேலு இரவு அவரது அறையில் தூங்க சென்று விட்ட நிலையில் காலையில் நீண்ட நேரமாகியும் அவரது அறை கதவு திறக்காததால் அவரது மனைவி அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குழந்தைவேலு உயிரிழந்து படுக்கையில் இருந்து கீழே விழுந்து கிடப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கை.களத்தூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பெற்ற தந்தையையே மகன் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து கை.களத்தூர் போலீசார் 341 தடுத்து தாக்குதல் 294(b) தகாத வார்த்தைகளால் திட்டுதல் 323 கைகளால் அடித்தல் 324 ஆயுதங்களால் தாக்குதல்

506(ii) ஆயுதத்தை கையில் வைத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கை.களத்தூர் போலீசார் சந்தோஷை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

 

  • 2

VIDEOS

Recommended