காக்களூர் மதுபான கிடங்கில் ரூ.10 லட்சம் மதுபானங்கள் திருட்டு.
ராஜ் குமார்
UPDATED: Aug 16, 2024, 1:20:12 PM
திருவள்ளூர்
காக்களூர் மதுபான கிடங்கில் சுமார் 10 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் திருடபோனதாக புகார் எழுந்துள்ளது.
புகாரின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் ரேணுகா, பன்னீர்செல்வம் ஆகியோர் 50 க்கும் மேற்பட்ட ஊழியர்களை வைத்து டாஸ்மாக் பெட்டிகளை எண்ணும் பணியில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் டாஸ்மாக் குடோன் இயங்கி வருகிறது, இங்கிருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பழவேற்காடு, பொன்னேரி, ஊத்துக்கோட்டை , திருவள்ளுர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த சுமார் 250 டாஸ்மாக் கடைகளுக்கு லாரிகள் மூலம் பாதுகாப்பாக சுமார் 5 லட்சம் மது பாட்டில்கள் பெட்டியில் அடைத்து வைத்து வழங்கப்பட்டு வருகிறது.
டாஸ்மாக்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காக்களூர் டாஸ்மாக் கிடங்கு மேலாளர், பணி மாறுதலாகி சென்றுள்ளார்.
இந்நிலையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் கிடங்கில் கிழக்கு மாவட்ட மேலாளர் ரேணுகா பொறுப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.
Latest Crime News
சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களை ஒளிப்பதிவு செய்யக்கூடாது என சென்னை மண்டல முதுநிலை மேலாளர் பன்னீர்செல்வம் சோதனையை ஒளிப்பதிவு செய்யவிடாமல் தடுத்து செய்தியாளர்களை ஒருமையில் பேசி தகராறு ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.