காஞ்சிபுரத்தில் ஓய்வுபெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்.
லட்சுமி காந்த்
UPDATED: Nov 8, 2024, 9:11:47 AM
காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் காலண்டர் தெருவில் வசித்து வந்தவர் கஸ்தூரி (62). ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். சுமார் 20 ஆண்டுகளுக்குந மேலாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
ஓய்வுக்கு பின், பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆக.22 ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கஸ்துாரியின் வீட்டை விற்பனை செய்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கஸ்தூரி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
சம்பவ இடத்தில் உள்ள, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், கஸ்தூரியின் குடும்ப நண்பரான, மதிமுக மாவட்ட செயலரான வளையாபதி மற்றும் அவரது நண்பரான பிரபு ஆகிய 2 பேரும் சேர்ந்து கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி மற்றும் பிரபு ஆகிய 2 பேரையும் ஆக.28 ஆம் தேதி போலீசார் கைது செய்து போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது, இவர்களை போலீசார் அடித்து சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, இதுகுறித்து, மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது.
க்ரைம் நியூஸ்
இதனைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது. டிஎஸ்பி நிலையில் உள்ள அதிகாரி விசாரணையை துவக்கி உள்ளார்.
சிபிசிஐடி விசாரணை
அவர், ஜாமினில் வெளிவந்துள்ள வளையாபதியிடம் விசாரித்துள்ளார். அவரின் வங்கி கணக்கும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
அடுத்தாக பிரபுவிடம் விசாரணை நடக்க உள்ளதாக, சிபிசிஐடி வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.