சென்னையிலிருந்து நாகைக்கு ஆன்லைன் லாட்டரி விற்பனை.
செ.சீனிவாசன்
UPDATED: May 10, 2024, 6:20:02 PM
நாகப்பட்டினம் மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் போலீசார் போலீசார் தொடர்ச்சியாக அதிரடி சோதனையில் ஈடுபட்ட வருகின்றனர்
இந்த நிலையில் நாகூர் அடுத்த மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் இன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது காரைக்காலில் இருந்து வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டதில் காரின் பின் பகுதியில் துணிப்பையில் 30 லட்சம் ரூபாய் கட்டாக இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து காரில் வந்த இரண்டு நபர்களை நாகூர் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டதில் காரைக்கால் நேதாஜி நகரை சேர்ந்த அமிர்தாராஜன், திருப்பப்டினத்தை சேர்ந்த உப்பிளியப்பன் என்பதும், சென்னை சேர்ந்த ஆன்லைன் லாட்டரியில் விழுந்த பரிசு தொகைக்காக நாகூரை அடுத்த தெத்தி சமரசம் நகரை சேர்ந்த லாட்டரி ஏஜென்ட் முஜிபுர் ரஹ்மான் என்பவருக்கு கொடுப்பதற்காக பணம் கொண்டுவரப்பட்டது தெரிவித்தனர்.
இது குறித்து நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தி வரப்பட்ட 30 லட்ச ரூபாயையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அமிர்தராஜன், உப்பிளியப்பன் முஜிபு ரஹ்மான் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து பிடிபட்ட தொகையும், காரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் நேரில் பார்வையிட்டு லாட்டரி சீட்டு விற்பனை குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை பாராட்டினார்.