• முகப்பு
  • குற்றம்
  • இலங்கையில் ஒன்லைன் நிதி மோசடி130 சீனர்களுக்கு எதிர்வரும் 16 ம் திகதி வரை விளக்க மறியல்

இலங்கையில் ஒன்லைன் நிதி மோசடி130 சீனர்களுக்கு எதிர்வரும் 16 ம் திகதி வரை விளக்க மறியல்

ஜே.எம்.ஹாபீஸ்

UPDATED: Oct 13, 2024, 1:25:43 PM

ஒன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்ட சீனப் பிரஜைகள் 130 பேருக்கும் எதிர்வரும் 16 ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும் படி தெல்தெனிய பதில் நீதவான் சுவர்ணா கரலியத்த உத்தரவிட்டார்.

கண்டி நத்தரன்பொத்த பிரதேச ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்து இவர்கள் சட்டவிரோத கணனி மோசடியில் ஈடுபட்டார்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டு பல்லேகல பொலிசாரால் ஆஜர் படுத்தப்பட்டனர்.

கிடைக்கப் பெற்ற  முறைப்பாடு ஒன்றை அடுத்து கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் இவர்கள்  கைது செய்யப்பட்டு  பல்லேகல பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதன்போது, சந்தேகநபர்கள் பயன்படுத்திய 120 மடிக்கணினிகள், 15 டெஸ்க் டொப் கணனிகள் மற்றும் 300 அலைபேசிகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்கள், குண்டசாலை பகுதியில் உள்ள  விடுதி ஒன்றில் 47 அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாக, பொலிஸார் குறிப்பிட்டனர்.சந்தேக நபர்கள் சார்பில் சமல் அல்விஸ், அமித் பெரேரா, தாருக்க ஹீன்கெந்த ஆகிய சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்.

மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகி்னறன.

 

VIDEOS

Recommended