• முகப்பு
  • குற்றம்
  • சொகுசு வாழ்க்கைகாக தொடர் திருட்டில் இடுப்பட்ட வாலிப திருடன்கள்.

சொகுசு வாழ்க்கைகாக தொடர் திருட்டில் இடுப்பட்ட வாலிப திருடன்கள்.

கோபிநாத் பிரசாத்

UPDATED: Oct 8, 2024, 8:51:41 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம்

சங்கராபுரம் காவல் வட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டு அதிகமாக நடைபெற்று வந்த நிலையில் பொதுமக்களும் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டு சம்பந்தமாக புகார் தெரிவித்து வந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜூவ் சதுர்வேதி  உத்தரவால் திருக்கோவிலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் அவர்களின் ஆலோசனையின் படியும் உடனடியாக சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து காவல்துறையினர் இருசக்கர வாகன கொல்லையில் ஈடுபடும் குற்றவாளிகளை இரவு பகலாக தேடி வந்த நிலையில்

இன்று சங்கராபுரம் அருகே உள்ள மயிலாம்பாறை என்னுமிடத்தில் சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்

Latest Crime News Today In Tamil 

அப்போது காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது இரண்டு வாலிபர்கள் வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாக சென்றனர் 

காவல்துறையினர் இரண்டு கிலோமீட்டர் துரத்திச் சென்று சங்கராபுரம் மும்மூனை சந்திப்பு அருகே வளைத்து பிடித்தனர்போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ரிஷிவந்தியம் அருகே உள்ள பாசார் கிராமத்தைச் சார்ந்த பாண்டியன் மற்றும் நாராயணன் என்பது தெரியவந்தது

மேலும் அவர்கள் இருவரையும் சங்கராபுரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின

Breaking News Today In Tamil 

மேலும் இந்த இரண்டு நபர்களும் சங்கராபுரம் வடபொண்பரப்பி மூங்கில்துறைபட்டு மணலூர்பேட்டை ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாலை வேளையில் வாகனங்களை நோட்டமிடுவதும் மறுபடியும் விடியற்காலை மாஸ்க் அணிந்து கொண்டு சரியாக 2 -மணியிலிருந்து 3 - மணிக்குள் அதாவது பொதுமக்கள் ஆழ்ந்த தூக்கத்தில் உள்ள நேரமாக பார்த்து இருசக்கர வாகனத்தை திருடிய அந்த இடத்தை விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தட்டிச் சென்று விடுவார்களாம் என்பது தனிப்படை காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது 

மேலும் அந்த பணத்தை வைத்து கோவா கேரளா போன்ற சுற்றுலா தளங்களுக்கு சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து விட்டு மறுபடியும் வந்து தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபாடுவார்களாம் இந்த மாஸ்க் கொள்ளை கும்பல் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது

தொடர் திருட்டு

மேலும் இவர்களிடமிருந்து பாசார் கிராமத்தில் மாட்டு கொட்டையில் பதுக்கி வைத்திருந்த விலை உயர்ந்த ஆறு இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் 

இந்நிலையில் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காகவே இருசக்கர வாகனத் திரட்டில் ஈடுபட்டதாகவும் போலீசாரின் விசாரணையில் உண்மை சம்பவங்கள் வெளியாகின.

 

VIDEOS

Recommended