• முகப்பு
  • குற்றம்
  • மனைவியை கொலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்

மனைவியை கொலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்

ராமு தனராஜா

UPDATED: May 21, 2024, 3:14:16 AM

 லுணுகலை ஜனதாபுர தம்பபிட்டிய வத்த கும்புக்கன் ஓயவில் 38 வயதுடைய 2 பிள்ளைகளின் தாய் ஒருவர் தலைப் பகுதியில் காயமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 


17 வயதுடைய குறித்த பெண்ணின் மகள் தனது தாயின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதன்போது மரணத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸாரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட போது சந்தேகம் நபர் தப்பி சென்ற 36 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பின்னர் 

 தலைமறைவாகி இருந்த 45 வயதுடைய லுணுகலை ஜனதாபுர தம்பபிட்டிய பகுதியை சேர்ந்த நபர் குறித்த பெண்ணின் கணவர் நேற்று இரவு லுணுகலை நகரில் வைத்து லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப் பட்ட முதற்கட்ட விசாரணையின் போது முதலில் சிறிய கல் ஒன்றினால் தலை பகுதியை தாக்கியதாகவும் பின்னர் பெரிய கல் ஒன்றினால் தாக்கி கொலை செய்ததாக சந்தேக நபர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 


இருவருக்கும் இடையே மிக நீண்ட காலமாக குடும்ப தகராறு காணப்பட்டதாகவும் இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வருவதாகவும் பெண்ணின் வீட்டு பகுதிக்கு குறித்த நபர் செல்ல கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபரை பொலிஸாரின் விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் இன்றைய தினம் பசறை நீதிவான் நீதிமன்றதாதில் ஆஜர் படுத்த பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.VIDEOS

Recommended