திருச்சி விமான நிலையத்தில் ரூ.1கோடியே 19லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.
JK
UPDATED: Jun 25, 2024, 6:01:46 AM
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று சிங்கப்பூரிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் வந்தடைந்தது.
விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்கள் மற்றும் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஆண் பயணி ஒருவர் (Electric circular saw ) மின்சார ரம்பத்தில் (அறுக்கும் இயந்திரம்) ஸ்குரு வடிவில் ஒரு கிலோ 666 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அந்த பயணியிடம் அதிகாரிகள் யாருக்காக கடத்திவரப்பட்டது? கொடுத்து அனுப்பியது யார்? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்று பல்வேறு கோணத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூபாய் ஒரு கோடியே 19லட்சம் மதிப்புள்ளஎன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு