• முகப்பு
  • குற்றம்
  • பெலிக்ஸ் ஜெரால்டு டாக்குமென்ட்களை பெற்றுக்கொள்ள நீதிபதி அறிவுறுத்தல் - 1நாள் போலீஸ் கஸ்டடிக்கு நீதிபதி அனுமதி.

பெலிக்ஸ் ஜெரால்டு டாக்குமென்ட்களை பெற்றுக்கொள்ள நீதிபதி அறிவுறுத்தல் - 1நாள் போலீஸ் கஸ்டடிக்கு நீதிபதி அனுமதி.

JK

UPDATED: May 20, 2024, 1:58:22 PM

சவுக்குசங்கர் பெண் காவல்துறையினரை விமர்சித்து கொடுத்த நேர்காணல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சவுக்குசங்கர் மதுரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போது சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பு செய்த ரெட்பிக்ஸ் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் குற்றவாளியாக சேர்க்கப்பட வேண்டும் என நீதிபதி தனது கருத்தை தெரிவித்ததை தொடர்ந்து கடந்த 10ம்தேதி டெல்லியில் வைத்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை காவல்துறையினர் பெலிக்ஸ்ஜெரால்ட் கைது செய்தனர்.

தொடர்ந்து திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். 

அவருக்கு 15நாள் நீதிமன்ற காவலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இன்று காலை திருச்சி நீதிமன்றத்தில் பெலிக்ஸ் ஜெரால்டை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்பு காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

அப்போது இரு தரப்பினர் வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினர்.

அப்போது ஃபெலிக்ஸ் ஜெரால்டின் வழக்கத்திற்கு சம்பந்தம் இல்லாத டாக்குமெண்ட்டுகள் கைப்பற்றது இதுவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை என பெலிக்ஸ் ஜெரால்ட் வழக்கறிஞர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அதை தொடர்ந்து வழக்கறிஞர்கள் மனு அளித்து டாக்குமெண்ட்டை பெற்றுக்கொள்ள நீதிபதி அறிவுறுத்தினார்.

தொடர்ந்து காவல்துறையினர் 7நாள் விசாரணைக்காக மனு செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயப்பிரதா பெலிக்ஸ் ஜெரால்டுடை நாளை மதியம் 3 மணி வரை போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவிட்டார்.

ஏற்கனவே 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்கும் நிலையில் இன்று ஒரு நாள் காவல்துறை விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நேற்று பெலிக்ஸ்ஜெரால்டுக்கு சொந்தமான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள கொட்டச்சேரியில் அவருக்கு சொந்தமான நிலத்தில் வைக்கப்பட்டுள்ளது சோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு.நீதிமன்ற காவலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் சைபர் கிரைம் அலுவலகம் அல்லது ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெலிக்ஸ் ஜெரால்டின் வழக்கறிஞர் கென்னடி :

காவல்துறை சார்பில் கஸ்டடி கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர் நாங்கள் அதற்கு ஒத்துழைக்கிறோம் என கூறியுள்ளோம்.

7நாள் அவர்கள் கஸ்டடி கேட்டு இருந்தார்கள். ஆனால், நீதிமன்றம் ஒரு நாள் மட்டுமே அனுமதித்துள்ளது.

மேலும் மூன்று முறை வழக்கறிஞர் அவரை சந்திக்கலாம் எனவும் அனுமதி வழங்கி உள்ளனர். 

வழக்குக்கு சம்பந்தமில்லாமல் வீட்டிற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை எடுத்துச் செல்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தார் என்று நீதிபதி கேள்வியை முன் வைத்தார்

மேலும் அவரது செல்போனை 13ம் தேதி ஒப்படைக்க வேண்டும் ஆனால் ஒப்படைக்கவில்லை இது தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தோம் அதனை இன்று நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தை ஒழிப்பதற்கான எல்லா வேலைகளையும் செய்கின்றனர்.

குற்றத்திற்கான நடவடிக்கை பதிலாக குடும்பத்துடைய ஒட்டுமொத்த வருமானத்தையே காலி பண்ணுவதற்கான வேலையை செய்கிறார்கள்.

இது சட்டத்துக்கு முரணான விஷயம் என பதிவு செய்துள்ளோம்.

அதற்கு மனு தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இன்று ஜாமீன் கேட்டிருந்தோம் ஆனால் காவல்துறையினர் கஸ்டடி மனு தாக்கல் செய்திருப்பதால் சண்டை வேண்டாம் என்று விட்டு விட்டோம். காவல்துறை அதிகார பலம் என்பது மிக மோசமான அதிகார பலம்.

சட்டத்திற்கு முரணான பலத்தை வைத்துள்ளனர். அதன் மீது தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறார்கள். நாங்கள் சட்டப்படியான நடவடிக்கை எடுங்கள் என்று தான் சொல்கிறோம் என தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended