• முகப்பு
  • குற்றம்
  • திருப்புல்லாணியில் சாமி நகைகள் மாயம் தேவஸ்தான கோவில்களில் ஆபரணங்கள் ஆய்வு.

திருப்புல்லாணியில் சாமி நகைகள் மாயம் தேவஸ்தான கோவில்களில் ஆபரணங்கள் ஆய்வு.

கார்மேகம்

UPDATED: May 20, 2024, 7:42:59 AM

திருப்புல்லாணி கோவிலில் ரூ. 1 கோடி  மதிப்பிலான நகைகள் மாயமான சம்பவத்தை தொடர்ந்து சமஸ்தானம்  தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்களில் ஆபரணங்கள் சரியாக உள்ளதா ? என ஆய்வு  செய்யப்பட்டு வருகிறது

ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோவிலில் ஆதி ஜெகநாதப் பெருமாள் மற்றும் பத்மாஷனி தாயாருக்கு  அணிவிப்பதற்காக உள்ள மொத்த நகைகளில் 952 கிராம் எடை உள்ள 30 தங்க நகைகள் 1199 கிராம் எடை உள்ள 16 வெள்ளி நகைகள் மாயமானது

இது தொடர்பாக திவான் பழனிவேல் பாண்டியன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸ் சார் மேற்கண்ட நகை பொறுப்பாளர் ஆலய ஸ்தானிகர் சீனிவாச அய்யங்கார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

ஸ்தானிகரிடமும் அந்த காலகட்டத்தில் பணியாற்றிய பணியாளர்கள் ராமு. பாண்டி .சாமிதுரை .கிருஷ்ணமூர்த்தி ஸ்தானிகரின் அண்ணன் தெய்வச்சிலை ராமசாமி மற்றும் முன்னால் திவான் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக முன்னால் திவானிடம் போலீஸ் சார் 3 முறை விசாரணை நடத்தி உள்ளனர்

இந்நிலையில் நகைகள் மாயமான சம்பவத்தை தொடர்ந்து சமஸ்தான ராணி அனைத்து கோவில்களின் நகைகளை ஆய்வு செய்து சரியாக உள்ளதா என கணக்கிட முடிவு செய்தார்

இதன்படி கடந்த 4 நாட்களாக ராமநாதபுரம்  சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பெரிய கோவில்களில் அணிவிக்கப்படும் பாதுகாக்கப்படும் நகைகள் ஆய்வு செய்யப்பட்டது 

ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான ராணி ராஜேஸ்வரி அறங்காவலர் அபர்ணா ஆகியோர் முன்னிலையில் திவான் பழனிவேல் பாண்டியன் உள்ளிட்டோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்

ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் கோதண்டராமர் கோவில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் திரு உத்தரகோசமங்கை கோவில் திருவாடானை ஆதிரெத்தினேசுவரர் கோவில் நயினார் கோவில் சொக்கநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் உள்ள நகைகள் ஒவ்வொன்றாக எடுத்து ஆவணங்களின் அடிப்படையில் சரியாக உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர்.

இதற்காக நகை மதிப்பீட்டாளர் குழு வரவழைக்கப்பட்டு நகைகள் கணக்கிட்டு  சரி பார்க்கப்பட்டன இந்த ஆய்வில் அனைத்து கோவில்களிலும் நகைகள் ஆவணங்களின் அடிப்படையில் சரியாக  இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது

தொடர்ந்து இந்த ஆய்வு  மேற்கொள்ளப்படும் என்றும் அனைத்து கோவில்களிலும் உள்ள நகைகள் சரிபார்த்து ஆவணங்களில் பதிவு செய்யப்படும் என்றும் சமஸ்தானத்தினர் தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended