24 மணி நேரமும் சட்டவிரோதமாக செயல்படும் டாஸ்மாக் பார்
L.குமார்
UPDATED: Jun 2, 2024, 7:37:06 AM
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி உட்கோட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட சிப்காட் காவல் நிலைய எல்லைப் பகுதியான வேர்க்காடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடை எண் 87 41 கடையையொட்டி சட்டவிரோதப் பார் செயல்பட்டு வருகிறது.
இந்த பாரில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் நேரத்திற்கு ஏற்றவாறு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு அரசு டாஸ்மாக் கடையின் 87 41 டாஸ்மாக் ஊழியர்கள் உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த பாரானது திருவள்ளூர் மாவட்டத்திலேயே அதிக அளவில் சட்டவிரோத மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் பாராக செயல்பட்டு வரும் வாராக உள்ளது.
இதுகுறித்து இல்லத்தரசிகளும் பொதுமக்களும் பலமுறை தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் தேர்தல் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த பாரின் உரிமையாளர் ஆளும் கட்சி பிரமுகர் என கூறப்படும் நிலையில நாளை முதல் பொதுமக்களின் நலன் கருதி அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டாலும் மேற்கண்ட அரசு மதுபான கடையை ஒட்டி செயல்படும் இந்த சட்ட விரோத பார் மட்டும் செயல்படும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை என அங்கு வேலை செய்யும் வேலை ஆட்கள் பகிரங்கமாக தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளும் கண் கட்டி பொம்மை போல் செயல்பட்டு வருகின்றனர்.
எனவே நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ள நிலையில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் பாதுகாக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் குறிப்பாக கும்மிடிப்பூண்டி உட்கோட்ட காவல் எல்லை காவல்துறை அதிகாரிகள் தமிழக அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டுமென எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.