• முகப்பு
  • குற்றம்
  • புவனகிரி பகுதி கிராமப்புறங்களில் ரசாயனத்தால் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை ஜோராக நடைபெற்று வரும் அவலம்

புவனகிரி பகுதி கிராமப்புறங்களில் ரசாயனத்தால் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை ஜோராக நடைபெற்று வரும் அவலம்

சண்முகம்

UPDATED: May 21, 2024, 7:51:41 AM

கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பல்வேறு இடங்களில் சிறிய சரக்கு வாகனத்தில் ரசாயனம் கலந்து பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது.

இதன் ஆபத்தையும், பின் விளைவையும் தெரியாத கிராமப்புற மக்கள் இவ்வாறு விற்பனை செய்யப்படும் மாம்பழங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

ஆரம்பத்தில் எதுவுமே தெரியாதது போன்று இருக்கும் இதுபோன்ற மாம்பழங்களை உண்பதால், பக்க விளைவுகளும் உடல்நலக் கோளாறுகளும் அதிகம் ஏற்படும் என மருத்துவத்துறையினர் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் இதை பயன்படுத்தவே கூடாது எனவும் குறிப்பிடுகின்றனர். ஆனாலும் கிராமப்புற மக்களை ஏமாற்று விதமாக பலர் சிறிய சரக்கு வாகனங்களில் டன் கணக்கில் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனர்.

நகரங்களில் விற்பனை செய்தால் எளிதில் சிக்கிக் கொள்வோம் அல்லது கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் பலர் சிறிய சரக்கு வாகனங்களின் மூலம் கிராமப்புறங்களில் தள்ளுபடி விலையில் மாம்பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இதனை தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் உறங்குகின்றனரா? என பொதுமக்கள் வேதனையோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended