• முகப்பு
  • குற்றம்
  • வீராணம் ஏரியின் தண்ணீர் பச்சை நிறமாக காணப்படுவதால் அதிர்ச்சி. வரலாற்று சிறப்புமிக்க நீர் தேக்கத்தில் நஞ்சை கலந்தது யார் என விவசாயிகள் கேள்வி ?

வீராணம் ஏரியின் தண்ணீர் பச்சை நிறமாக காணப்படுவதால் அதிர்ச்சி. வரலாற்று சிறப்புமிக்க நீர் தேக்கத்தில் நஞ்சை கலந்தது யார் என விவசாயிகள் கேள்வி ?

சண்முகம்

UPDATED: May 29, 2024, 11:34:15 AM

Cuddalore District News

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் தற்போது நீர்வரத்து துவங்கியுள்ளது. வினாடிக்கு 1400 கன அடி தண்ணீர் வீதம் எரிக்கு உள்ளே வந்து கொண்டுள்ளது.

இந்நிலையில் புதிய நீர் ஏரியின் கூளாப்பாடி, வாழைக்கொல்லை, வெய்யலூர், பரிபூரணநத்தம் பகுதி ஏரியின் உள்ளே தண்ணீர் பச்சை நிறமாக காணப்படுகிறது.

மேலும் வெளிர் ஊதா நிறமான திரவமும் காணப்படுகிறது. இதனைக் கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Latest Cuddalore District News

ஏற்கனவே வீராணம் ஏரியில் நஞ்சுகள் அதிகம் கலந்திருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில் தற்போது புதிய நீரில் தண்ணீரின் நிறம் பச்சையாகவும், வெளிர் ஊதா நிறமாகவும் மாறி இருப்பது கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்தத் தண்ணீரை ஆயிரக்கணக்கான கால்நடைகளும், பறவைகள் மற்றும் மனிதர்களும், விவசாயிகளும், மீனவர்களும் பல்வேறு பயன்பாட்டுகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

உடனடியாக நீரை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் தரத்தை எவ்வாறு உள்ளது என்பதை இப்பகுதி மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

Live Cuddalore District News

முக்கியமாக இந்த தண்ணீரை தற்போது சென்னை குடிநீருக்காக கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த வீராணம் ஏரியில் பலருக்கும் பேரதிர்ச்சியை தரும் விதமாக சத்தம் இல்லாமல் ஏரியில் நஞ்சை கலந்தது யார் என விவசாயிகள் வேதனையோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அரசு நீர்நிலைகளை கண்காணித்து பராமரிப்பதில் கோட்டை விட்டுள்ளது என்பதே இதுபோன்று ஏற்பட காரணம் என்று இப்பகுதி கிராமத்தினர் கூறி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended